I'm a Freelance Website Developer From Tamil Nadu
நான் யாசின் எம் எம் (Yasin M M)
விரைவாகவும், கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் Responsive ஆகவும், இயங்கக்கூடிய இணையதளத்தை பெற என்னை தொடர்பு கொள்ளவும்.
எனது சேவைகள்
என்னை பற்றி
Yasin M M a Website Developer from Tamil Nadu, India.
நான் தமிழ்நாட்டை சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் மற்றும் உருவாக்குனர் ஆவேன். தனிப்பட்ட நபர்களுக்கானாலும்(Personal Websites), உங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக வெளியிடுவதானாலும்(Blog Websites), உங்கள் தொழிலுக்கான இணையதளங்களை(Business Websites) உருவாக்க விரும்பினாலும், மின் வணிக இணையதளங்களை(E-Commerce Website) உங்கள் பொருட்களுக்காக உருவாக்க விரும்பினாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். நான் எந்த நிறுவனங்களையும் சாராத, தனி இணையதள தீர்வுகளுக்கான நிபுணர்(Freelance Web Solution Expert) ஆவேன். எந்த விதமான இணையதளங்களை நீங்கள் உருவாக்க விரும்பினாலும், தயக்கமின்றி என்னை தொடர்பு கொள்ளலாம்.
நான் வழங்கும் சேவைகள்

இணைய தளம் தொடர்பான ஆலோசனைகள்
உங்களுடைய தேவை என்ன, உங்கள் தேவைக்கு எது போன்ற இணையதளங்கள் சரியாக இருக்கும், அந்த இணையதளத்தை உருவாக்க எவ்வளவு செலவு ஆகும். இது போன்ற உங்கள் மனதில் இருக்கும் எந்த ஒரு இணையதளம் தொடர்பான சந்தேகத்தையும் என்னிடம் நீங்கள் ஆலோசிக்கலாம்.

இணையதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்
உங்களுடைய தேவையை பொருத்து, உங்கள் தொழிலுக்கான இணையதளமானாலும், உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பதற்கோ, இணையவழி வகுப்புகளை தெரியப்படுத்துவதற்கோ, Appointment Booking போன்ற இணையதளங்களோ, என எதுவானாலும், தனி நபர் இணையதளம் முதல், ஒரு நிறுவனத்தின் முழு இணையதளம் வரை தேவைப்படுபவர்கள் என்னை அணுகலாம்.
என்னால் உருவாக்கபட்ட இணையதளங்கள்
என்னை தொடர்பு கொண்டு, உங்கள் தொழிலுக்கும் இதே போன்ற தனித்துவமான இணையதளங்களை நீங்கள் பெறலாம்.






வாடிக்கையாளர் கருத்துக்கள்
என்னிடம் இணைய தள சேவையை பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

திரு யாசின் எம் எம் அவர்களிடம் என்னுடைய தேவையை மட்டும் சொல்லி விட்டேன். எப்படிப்பட்ட இணையதளம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை மிகச் சரியாக கண்டறிந்து வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

ஒரு தொழிலுக்கு இணையதளம் எத்தனை முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர் திரு யாசின் எம் எம் ஆவார். தற்சமயம் எனது வர்த்தகங்கள் பெரும்பாலும் இணையதளத்தை சார்ந்தே நடக்கின்றன. இணையதளத்தை பயன்படுத்தி என்னுடைய வருமானம் தற்சமயம் அதிகம் வளர்ந்திருக்கிறது.

திரு யாசின் எம் எம் அவர்கள் உருவாக்கி தரும் இணையதளம், வடிவமைப்பிலும் செயல் திறனிலும் மிகச் சிறப்பாக இருப்பதோடு, கணினி, டேப்லெட், தொலைபேசி ஆகியவற்றிற்கும் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டிருக்கிறது.