என்னை பற்றி

இணைய தளம் அல்ல ! அடையாளம் மற்றும் வளர்ச்சி !
நான் உருவாக்கி தரும் இணையதளங்கள் பெயரளவிற்க்காக மட்டும் இயங்கக் கூடியதாக இல்லாமல், உங்கள் தொழிலுக்கான மற்றும் ஒரு புதிய அடையாளமாகவும், உங்கள் தொழிலை வளர்த்தெடுக்கக் கூடிய கருவியாகவும் இருக்கப்போகிறது. உங்கள் தேவைக்கு எதுபோன்ற இணையதளங்கள் சரியாக இருக்கும் என்பதை சிந்தித்து, உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எது போன்ற இணையதளங்கள் சரியாக வரும் என்பதை ஆய்வு செய்து, என்னால் உருவாக்கித் தரக்கூடிய தனித்துவமான இணையதளங்கள், ஒரு பெயரளவு இணையதளமாக அல்லாமல், உங்கள் தொழிலுக்கான தனித்துவமான அடையாளத்தை இணைய உலகில் ஏற்படுத்தி, உங்கள் தொழிலை பெரிய அளவு வளர்த்தெடுக்க உதவும். உங்கள் தொழிலுக்கான இணைய தளம் இயங்குவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீங்கள் என்னிடம் விட்டு விடலாம். இணையதளம் உருவாக்குவது தொடர்பாக உங்களுக்கு எந்த சந்தேகம் இருப்பினும் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் ஆலோசிக்கலாம்.
A Freelance Website Developer & Web Solutions Expert From Tamil Nadu, India
வணக்கம் ! என்னுடைய பெயர் யாசின் எம் எம் ஆகும். நான் இளநிலை வணிகவியல்(B.com,), செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல்(CMA), மற்றும் லண்டனில் இயங்கக்கூடிய CIMA அமைப்பின் Certificate in Business Accounting போன்ற ஒரு தொழிலின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறியக்கூடிய படிப்புகளில் பயணப்பட்டு, காரைக்குடியில் இருக்கும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்கிறேன்.
எனது இந்த கல்வி பயணத்தில், தொழிலுக்கு இருக்கும் பல சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆர்வத்தின் அடிப்படையில், தொழில்களில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களை கண்டறிந்து, இணையதளம் தொடர்பான தொழில்நுட்பத்தில் தேவையான யாவற்றையும் கற்று, தற்சமயம் இணையதள வடிவமைப்பாளர்(Web Designer) மற்றும் இணையதள உருவாக்கினராகவும்(Website Creator or Website Developer), தொழில்களுக்கு இணையத்தில் இருக்கும் சவால்களுக்கு தீர்வுகளை தரக்கூடிய தனி நிபுணராகவும் இருக்கிறேன்( Freelance Web Solutions Expert).
என்னுடைய வழிகாட்டுதலின்படியும், என்னுடைய வடிவமைப்பு மற்றும் உருவாக்குதலின் அடிப்படையில், தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் இயங்கக் கூடிய தொழில்களுக்கு தேவைப்படும் இணைய தீர்வினை, இணைய தளங்களை உருவாக்கி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.
தற்சமயம் நான் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கல்வியின் காரணமாகவும், எனது பூர்வீக இருப்பிட அடிப்படையிலும், மதுரை, காரைக்குடி, சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்திருப்பதனாளும், தமிழகத்தின் வர்த்தக சந்தை, மற்றும் மக்களின் மனநிலையை நன்கு புரிந்து இதற்கு ஏற்றார் போல் தனித்துவமான இணையதளங்களை ஒவ்வொரு தொழில்களுக்கும் நான் ஏற்படுத்தி தருகிறேன்.
இவ்வாறு, தொழில்கள் இயங்கக்கூடிய தன்மையை கல்வியில் பின்புலமாக கொண்டும், தமிழ் நாடு பூர்வீக இருப்பிடப் பின்புலமாக இருப்பதனாலும், கல்வியிலும் குறிப்பிட்ட அளவு சர்வதேச வர்த்தக புரிதலை நான் பெற்றிருப்பதனாலும், இத்துடன் தொழில்நுட்பத்தை என்னுடைய தனி ஆர்வத்தில் நான் கற்று தேர்ந்தெடுப்பதனாலும், நான் உருவாக்கித் தரக்கூடிய இணையதளங்கள், தொழிலின் தேவைகளை புரிந்தும், உள்ளூர் தேவைகளை புரிந்தும், சர்வதேச சந்தையின் புரிதலுடனும் இயங்குவதால், மற்றவர்களை காட்டிலும் நான் உருவாக்கித் தரும் இணையதளங்கள், எனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொழிலை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதற்கு உதவுகிறது.
என்னை தொடர்பு கொள்ள,
அலைபேசி:- (+91) 6381483562
மின்னஞ்சல்:- mail@yasinmm.com
எனது திறன்கள்
பிறர் என்ன சொல்கிறார்கள் ?
எனது வாடிக்கையாளர்கள் என்னைப் பற்றி சொல்லும் கருத்துக்கள் கீழே!

திரு யாசின் எம் எம் அவர்கள் நான் சொல்வதை மிக சுலபத்தில் புரிந்து கொண்டு, எனது தேவையை கண்டறிந்து எனது இணையதளத்தை உருவாக்கியும் பராமரித்தும் வருகிறார். இவருக்கு இருக்கும் தொழில்துறை சார்ந்த புரிதலின் காரணமாக எனது நேரம் பெரும் அளவு மிச்சம் ஆகிறது.

என்னுடைய இணையதளத்திற்கான SEO தொடர்பான பணிகளை திரு யாசின் எம் எம் அவர்கள் தான் கவனித்து வருகிறார். தற்சமயம் எனது இணையதளத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள், இதன் காரணமாக எனது விற்பனை இன்று சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. நிச்சயமாக திரு யாசின் எம் எம் அவர்கள் ஒரு திறமையான இணையதள உருவாக்குனர் மற்றும் பராமரிப்பாளர் தான்.

திரு யாசின் எம் எம் அவர்களிடம் என்னுடைய தேவையை மட்டும் சொல்லி விட்டேன். எப்படிப்பட்ட இணையதளம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை மிகச் சரியாக கண்டறிந்து வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

ஒரு தொழிலுக்கு இணையதளம் எத்தனை முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர் திரு யாசின் எம் எம் ஆவார். தற்சமயம் எனது வர்த்தகங்கள் பெரும்பாலும் இணையதளத்தை சார்ந்தே நடக்கின்றன. இணையதளத்தை பயன்படுத்தி என்னுடைய வருமானம் தற்சமயம் அதிகம் வளர்ந்திருக்கிறது.

திரு யாசின் எம் எம் அவர்கள் உருவாக்கி தரும் இணையதளம், வடிவமைப்பிலும் செயல் திறனிலும் மிகச் சிறப்பாக இருப்பதோடு, கணினி, டேப்லெட், தொலைபேசி ஆகியவற்றிற்கும் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டிருக்கிறது.